தேவையான பொருட்கள் :
1. எண்ணெய் - தேவையான அளவு
2. கடுகு - 1 தே.கரண்டி
3. உளுத்தம்பருப்பு - 1தே.கரண்டி
4. கறிவேப்பிலை - சிறிதளவு
5. சின்ன வெங்காயம் - 5
6. மிளகாய் - 1
7. உப்பு - தேவையான அளவு
8. கற்பூரவல்லி இலை - 1/4 கப்
9. புளி - 1 எலுமிச்சை அளவு
10. சீரகம் -1/2 தே.கரண்டி
11. மிளகு - 1/4 தே.கரண்டி
12. பூண்டு - 7
13. மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி
14. பெருங்காயத்தூள் - 1/4 தே.கரண்டி
15. தக்காளி - 1
16. கொத்தமல்லி இலை - சிறிதளவு
செய்முறை :
1. கற்பூரவல்லி இலையை நன்கு சுத்தம் செய்து கொள்ளவும்
2. பின்பு கற்பூரவல்லி இலை, பூண்டு, மிளகு, சீரகம் , சிறிது கொத்தமல்லி இலை, சிறிது கறிவேப்பிலை சேர்த்து அம்மி / மிக்சியில் அரைத்து கொள்ளவும்
3. புளியை தண்ணீர் சேர்த்து நன்கு ஊர வைத்து கரைத்து வடிகட்டி புளி தண்ணீரை எடுத்துக் கொள்ளவும்
4. தக்காளி மற்றும் வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
5. பின்பு அடுப்பை பற்ற வைத்து பாத்திரத்தை வைக்கவும்
6. தாளிப்பதற்கு தேவையான எண்ணெய்யை ஊற்றி சூடு ஆனதும் கடுகு உளுத்தம்பருப்பு சேர்க்கவும்
7. கடுகு பொரிந்ததும் கறிவேப்பிலை , மிளகாய், நறுக்கிய வெங்காயம், தக்காளி போட்டு வதக்கவும்
8. வெங்காயம் , தக்காளி வதங்கியதும் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து வதக்கவும்
9. நன்கு வதங்கியதும் புளி தண்ணீரை ஊற்றி தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்த பின்பு மஞ்சள் தூள் சேர்த்து மூடி வைக்கவும்
10. நன்கு நுரைத்து கொதி வந்ததும் பெருங்காயத்தூள் சேர்த்து இறக்கி கொத்தமல்லி இலை மற்றும் இரண்டு கற்பூரவல்லி இலையை இரண்டாக நறுக்கி தூவினால் கற்பூரவல்லி ரசம் தயார்
*****"சுவைத்து மகிழுங்கள்"*****