Monday, October 25, 2021

நாவல் பழ ஜாம் - இரும்புச்சத்தை அதிகரிக்கும்

 

நாவல் பழம்


தேவையான பொருட்கள்:


 1. நாவல் பழம்           - 1 கப்

 2. வெல்லம்                 - 3/4 கப்

 3. ஏலக்காய் தூள்     - 1 சிட்டிகை



செய்முறை:


1. நாவல் பழத்தை நன்றாக சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.

2. ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி நாவல் பழத்தை போட்டு அடுப்பில் வைத்து சிறிது நேரம் வேக வைத்து இறக்கவும்.

3. சூடு குறைந்ததும் நாவல் பழத்தில் உள்ள விதைகளை எடுத்து விட்டு நன்கு பிசைந்து கொள்ளவும்.

4. வெல்லத்தை சீவி எடுத்துக் கொள்ளவும்.

5. பிசைந்து வைத்துள்ள நாவல் பழத்தை ஒரு பாத்திரத்தில் மாற்றி சீவி வைத்த வெல்லத்தை போட்டு நன்கு கிளறி விடவும்.

6. வெல்லம் நன்கு கரைந்து ஜாம் பதம் வந்ததும் ஏலக்காய் தூள் சேர்த்து இறக்கவும்.துவர்பும் இனிப்பும் கலந்த ஜாம் தயார்.


       *****"சுவைத்து மகிழுங்கள்"*****



No comments:

Post a Comment

வெந்தயக் குழம்பு

  தேவையான பொருட்கள்: 1. கடுகு – 1 தே.கரண்டி 2. வெந்தயம் – 1 தே.கரண்டி 3. ஜீரகம் – 1 தே.கரண்டி 4. பூண்டு ( தோல் நீக்கியது ) – 15 5. சின்ன வெங...