Sunday, October 17, 2021

வேப்பம்பூ பிரியாணி





தேவையான பொருட்கள் ‌:

1. எண்ணெய்               - தேவையான அளவு
2. நெய்                            - 3 தே.கரண்டி
3. அரிசி                           - 1/2கிலோ
4. பெரிய வெங்காயம்  - 1
5. பச்சை மிளகாய்         - 5
6. பட்டை                             - 2
7. பிரிஞ்சி இலை            - 2
8. கிராம்பு                           - 3
9. நட்சத்திர பூ                   - 2
10. ரோஜா மொக்கு        - 2
11. இஞ்சி,பூண்டு விழுது - 2 தே.கரண்டி
12. சோம்பு                             - 1 தே.கரண்டி
13. உப்பு                          - தேவையான அளவு
14. பிரியாணி மசாலா - 1 தே.கரண்டி
15. வேப்பம்பூ (நெய்யில் வதக்கி) - 1 கைப்பிடி அளவு
16. கறிவேப்பிலை - தேவையான அளவு
17. மிளகாய் தூள் - 1தே.கரண்டி

செய்முறை :

1. அடுப்பை பற்ற வைத்து பிரியாணி செய்ய குக்கர் வைக்கவும்
2. தாளிப்பதற்கு தேவையான எண்ணெய்யை ஊற்றவும்
3. எண்ணெய் சூடு ஆனதும் பிரிஞ்சி இலை, கிராம்பு, ரோஜா மொக்கு, நட்சத்திர பூ போட்ட உடன் சோம்பு போடவும்
4. சோம்பு பொரிந்ததும் கறிவேப்பிலை , பச்சைமிளகாய், நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும்
5. வெங்காயம் வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
6. நன்கு வதங்கியதும் ஊர வைத்த அரிசியை சேர்த்து அதற்கு ஏற்ப தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்க்கவும்
7. பின்பு காரத்திற்கு ஏற்ப மிளகாய் தூள் சேர்த்து பிரியாணி மசாலா சேர்க்கவும்
8. இறுதியாக நெய்யில் வதக்கி வைத்த வேப்பம்பூ மற்றும் நெய் சேர்த்து குக்கரை மூடி விடவும்
9. இரண்டு விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும். வேப்பம்பூ பிரியாணி தயார்....
   *****"சுவைத்து மகிழுங்கள்"*****

No comments:

Post a Comment

வெந்தயக் குழம்பு

  தேவையான பொருட்கள்: 1. கடுகு – 1 தே.கரண்டி 2. வெந்தயம் – 1 தே.கரண்டி 3. ஜீரகம் – 1 தே.கரண்டி 4. பூண்டு ( தோல் நீக்கியது ) – 15 5. சின்ன வெங...