Friday, October 22, 2021

வாதம் போக்கும் வாதநாராயணன் / வாதநா கீரை துவையல்

 

வாதநாராயணன் கீரை



தேவையான பொருட்கள் ‌:

1. எண்ணெய்         - தேவையான அளவு

2. வாதநாராயணன் கீரை - 1 கைப்பிடி அளவு                             

3. உளுத்தம்பருப்பு          - 1தே.கரண்டி

4. மிளகாய்                         - 3

5. உப்பு                   - தேவையான அளவு

6. கடலை பருப்பு               - 1 தே.கரண்டி

7. புளி                                    - 1 சிறிதளவு

8. பூண்டு                               - 4

9. சின்ன வெங்காயம்.     -5

10. தேங்காய்                       -1/2 கப்


செய்முறை :


1. வாதநாராயணன் கீரை நன்கு சுத்தம் செய்து தண்டு இல்லாமல் எடுத்துக் கொள்ளவு

2. பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சுத்தம் செய்த வாதநாராயணன் கீரை போட்டு நன்கு வதக்கவும்

3. நன்கு வதங்கியதும் வேறு பாத்திரத்தில் மாற்றி விட்டு மறுபடியும் சிறிது எண்ணெய் சேர்த்து உளுத்தம்பருப்பு மற்றும் கடலைப் பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுக்கவு

4.அதை கீரை வைத்த பாத்திரத்தில் மாற்றி விட்டு வெங்காயம் , மிளகாய் மற்றும் பூண்டை வதக்கிய பின் புளி மற்றும் தேங்காய் சேர்த்து ஒரு முறை வதக்கி இறக்கி கீரை உடன் சேர்க்கவும்

5. சூடு குறைந்ததும் தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து மிக்ஸி / அம்மியில் அரைத்து எடுத்தால்  வாதநாராயணன் கீரை துவையல் தயார்


       *****"சுவைத்து மகிழுங்கள்"*****




No comments:

Post a Comment

வெந்தயக் குழம்பு

  தேவையான பொருட்கள்: 1. கடுகு – 1 தே.கரண்டி 2. வெந்தயம் – 1 தே.கரண்டி 3. ஜீரகம் – 1 தே.கரண்டி 4. பூண்டு ( தோல் நீக்கியது ) – 15 5. சின்ன வெங...