Friday, November 5, 2021

குமுட்டி கீரை கடையல் - நோய் எதிர்ப்பு ஆற்றல் கூட்டும்

 

குமுட்டி கீரை

தேவையான பொருட்கள்:

 1. குமுட்டி கீரை               - 1 கப்

 2. எண்ணெய்                  - தேவையான அளவு

 3. கடுகு                               - 1 தே.கரண்டி

 4. கறிவேப்பிலை            - 1 சிறிதளவு

 5. சின்ன வெங்காயம்   - 5

 6. காய்ந்த மிளகாய்       - 3


செய்முறை :

1. குமுட்டி கீரையை காய் இல்லாமல் கிள்ளி நன்கு சுத்தம் செய்து கொள்ளவும்.

2. பின்பு ஒரு பாத்திரத்தில் கீரையை சேர்த்து பாதி அளவு தண்ணீர் சேர்த்து நன்கு வேக வைக்கவும்.

3. நன்கு வெந்ததும் அதிகம் உள்ள நீரை வடித்து விட்டு மத்து கொண்டு நன்கு கடைந்து கொள்ளவும்.

4. பின் ஒரு தாளிப்பு சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போடவும். 

5. கடுகு பொறித்ததும் கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம், கிள்ளிய மிளகாய் சேர்த்து கடைந்து வைத்த கீரையை சேர்த்து வடித்து வைத்த நீரை தேவைக்கு ஏற்ப சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும். குமுட்டி கீரை கடையல் தயார்.

       *****"சுவைத்து மகிழுங்கள்"*****

No comments:

Post a Comment

வெந்தயக் குழம்பு

  தேவையான பொருட்கள்: 1. கடுகு – 1 தே.கரண்டி 2. வெந்தயம் – 1 தே.கரண்டி 3. ஜீரகம் – 1 தே.கரண்டி 4. பூண்டு ( தோல் நீக்கியது ) – 15 5. சின்ன வெங...