Sunday, November 21, 2021

வெந்தயக் குழம்பு

 

வெந்தயம்

தேவையான பொருட்கள்:

1. கடுகு – 1 தே.கரண்டி

2. வெந்தயம் – 1 தே.கரண்டி

3. ஜீரகம் – 1 தே.கரண்டி

4. பூண்டு ( தோல் நீக்கியது ) – 15

5. சின்ன வெங்காயம் - 25 

6. காய்ந்த மிளகாய் - 2

7. கறிவேப்பிலை – சிறிதளவு

8. உப்பு – தேவையான அளவு

9. நல்லெண்ணெய் - தேவையான அளவு

10. மிளகாய் தூள் – 2 தே.கரண்டி

11. மஞ்சள் தூள் - 1 தே.கரண்டி

12. வெந்தய பொடி – 2 தே.கரண்டி

13. புளிக் கரைசல் - தேவையான அளவு


செய்முறை:

1. முதலில்  வெந்தயத்தை வறுத்து பொடி செய்து கொள்ளவும். பின் தேவையான அளவு புளியை கரைத்து நன்கு வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்

2. பின் ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு,வெந்தயம்,ஜீரகம், சேர்த்து தாளிக்கவும். பின்னர் அதில் உரித்து வைத்துள்ள பூண்டை சேர்க்கவும்

3. பூண்டு வதங்கியவுடன் சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்

பின் மஞ்சள் தூள் , மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்

4. தேவையான அளவு உப்பு சேர்க்கவும். பூண்டு , வெங்காயம் நன்கு வதங்கியாவுடன் கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலை சேர்க்கவும்

5. புளிக்கரைசல் நன்கு கொதித்து குழம்பு சுண்டி வரும்போது வறுத்து பொடி செய்து வைத்துள்ள வெந்தயப் பொடியை சேர்க்கவும்

6. வெந்தயப் பொடி சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் கறிவேப்பிலை சேர்த்து இறக்கி விடவும்.சுவையான வெந்தயக் குழம்பு தயார்



       *****"சுவைத்து மகிழுங்கள்"*****








Friday, November 5, 2021

குமுட்டி கீரை கடையல் - நோய் எதிர்ப்பு ஆற்றல் கூட்டும்

 

குமுட்டி கீரை

தேவையான பொருட்கள்:

 1. குமுட்டி கீரை               - 1 கப்

 2. எண்ணெய்                  - தேவையான அளவு

 3. கடுகு                               - 1 தே.கரண்டி

 4. கறிவேப்பிலை            - 1 சிறிதளவு

 5. சின்ன வெங்காயம்   - 5

 6. காய்ந்த மிளகாய்       - 3


செய்முறை :

1. குமுட்டி கீரையை காய் இல்லாமல் கிள்ளி நன்கு சுத்தம் செய்து கொள்ளவும்.

2. பின்பு ஒரு பாத்திரத்தில் கீரையை சேர்த்து பாதி அளவு தண்ணீர் சேர்த்து நன்கு வேக வைக்கவும்.

3. நன்கு வெந்ததும் அதிகம் உள்ள நீரை வடித்து விட்டு மத்து கொண்டு நன்கு கடைந்து கொள்ளவும்.

4. பின் ஒரு தாளிப்பு சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போடவும். 

5. கடுகு பொறித்ததும் கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம், கிள்ளிய மிளகாய் சேர்த்து கடைந்து வைத்த கீரையை சேர்த்து வடித்து வைத்த நீரை தேவைக்கு ஏற்ப சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும். குமுட்டி கீரை கடையல் தயார்.

       *****"சுவைத்து மகிழுங்கள்"*****

வெந்தயக் குழம்பு

  தேவையான பொருட்கள்: 1. கடுகு – 1 தே.கரண்டி 2. வெந்தயம் – 1 தே.கரண்டி 3. ஜீரகம் – 1 தே.கரண்டி 4. பூண்டு ( தோல் நீக்கியது ) – 15 5. சின்ன வெங...